திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக இக்கோயிலில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து மேளதாளம் முழங்க கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம் கோயில் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.