ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலராக மணீஷ் குமார் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான மணீஷ் குமார், பாட்னா மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற அவர், பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு திரைமறைவில் ஆலோசனை அளித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த அவரை கட்சியின் பொதுச் செயலராக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.