பாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்தில் சவூதி அரேபியாவிலிருந்து வந்திறங்கிய விமானத்தில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். சவூதி அரேபியாவிலிருந்து பெஷாவர் பச்சாகான் சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் வந்திறங்கியது.
அப்போது அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக விமானத்தில் இருந்த 276 பயணிகளும், 21 பணியாளர்களும் அவசரவழி வாயிலாக வெளியேறி உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.