போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தியதாக திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாஃபர்சாதிக் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.