நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை புதின் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.
வாஷிங்டனில் நேட்டோ மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில், ‘உக்ரைன் காம்பெக்ட்’ உடன்படிக்கை நேட்டோ உறுப்பு நாடுகள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.
அப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை புதின் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்தினார். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை டொனால்ட் டிரம்ப் என ஜோ பைடன் குறிப்பிட்டது அக்கட்சி உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வயது முதிர்வு காரணமாக ஜோபைடன் தடுமாறுவதாக அவரது கட்சியினரே புலம்புவது குறிப்பிடத்தக்கது.