மதுரை தனியார் மருத்துவமனை உணவத்தில் பணிபுரியும் மூதாட்டியை நகைக்ககாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் 70 வயதுள்ள மூதாட்டி முத்துலெட்சுமி பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் 6வது தளத்தில் மர்மமான உயிரிழந்து கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது.
நகைக்காக மர்மநபர்கள் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.