திருச்சி மாவட்டம் உறையூரில் ஆடுகளை திருடிய ஆட்டோடிரைவரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை ஆட்டோவில் சென்ற கும்பல் ஒன்று திருடிச்சென்றது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் மூலம் அப்பகுதி மக்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதே ஆட்டோ மீண்டும் அப்பகுதியில் சென்ற போது பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.