ஜம்மு- காஷ்மீரில் பாரமுல்லா பகுதியில் நண்பகல் 12.26 மணிக்கு மிதமான நிலஅதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கட்டடங்கள் லேசாக குலுங்கியதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.