கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 42 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்று மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோபுரத்தில் உள்ள கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.