டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்ட்ர சமிதி நிர்வாகி கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இடைத்தரகர்களுக்கு அவர் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி கவிதா விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.