மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது.
மேற்கு வங்க அரசுக்கும், ஆளுநர் சி.வி. ஆனந்த போஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்துவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.