இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பேசிய அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
22 வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டுக்காக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி,வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி கட்டித் தழுவியதை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விமர்சித்திருந்த நிலையில், இப்போது அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியும் இந்தியாவை மிரட்டும் தொனியில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க தூதரின் கருத்துக்கு இந்தியாவின் முன்னாள் தூதரான கன்வால் தந்து எக்ஸ் பதிவில் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
புவிசார் அரசியலில் ரஷ்யா மீதான அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் கொள்கை இழிந்த அடிப்படையிலானது என்று கூறியுள்ள அவர், அமெரிக்காவை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அமெரிக்கா இதே முறையில் இனியும் இந்தியாவுடன் விளையாட முடியாது என்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட் பேசியிருந்தார்.
கடந்த வாரம், இராணுவப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பங்கேற்ற, யுனைட்ஸ் சர்வீசஸ் இன்ஸ்டிடியூஷனில் (யுஎஸ்ஐ) நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, , “இனி எந்த யுத்தமும் தொலைவில் இல்லை என்று கூறினார். மேலும் , இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், நாம் அமைதிக்காக மட்டும் நிற்கக்கூடாது. போரைத் தடுப்பதில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும் அமெரிக்காவுடன் சேர்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது என்றும் தெரிவித்தார்.
“கடந்த மூன்று ஆண்டுகளில், இறையாண்மை எல்லைகளை புறக்கணித்த நாடுகளை அமெரிக்க கண்டிப்பதாக தெரிவித்த எரிக் கார்செட்டி, எல்லைகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தியாவுக்கு அமெரிக்கா நினைவுபடுத்த வேண்டியதில்லை என்றும் அச்சுறுத்தும் தொனியில் பேசி இருந்தார்.
மேலும், அமெரிக்காவும் இந்தியாவும் நம்பகமான நண்பர்கள் என்பதை புரிந்து இருநாடுகளும் புரிந்து கொள்ளவேண்டும். வருங்காலங்களில் ஒன்றாக செயல்படவேண்டிய சூழல் ஏற்படலாம் என்று கூறிய எரிக் கார் செட்டி, இந்தியாவின் இராணுவப் பலத்தை அமெரிக்க அறிந்திருக்கும் அதே நேரம் அமெரிக்கவின் ராணுவப் பலத்தை இந்தியாவும் அறிந்திருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்க தூதரின் இந்த பேச்சுக்குத் தான் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, துருக்கி, எகிப்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக பணியில் இருந்த முன்னாள் இந்திய வெளியுறவு செயலரான கன்வால் சிபல் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி தந்திருக்கிறார்.
கன்வால் சிபல், தன்னுடைய எக்ஸ் பதிவில், அமெரிக்காவுடன் மிகவும் நல்ல உறவுகளை விரும்பும் அதே நேரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
கார்செட்டியின் கருத்துகளுக்கு பதிலளித்த புவிசார் அரசியல் ஆய்வாளர் கர்னல் ரோஹித் தேவ், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு எந்த இராணுவ அல்லது புவிசார் அரசியல் கூட்டணியையும் சார்ந்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா ஈடுபடும் எந்தப் போருக்கும், இந்தியா உடன்பட வேண்டிய அவசியமில்லை என்றும், இந்தியாவிற்கு அதன் சொந்த புவிசார் அரசியலில் இந்தியாவின் தேசிய நலன்களும் உள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.
UN போன்ற சர்வதேச அமைப்புக்களில், பல நேரங்களில் இந்தியாவின் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக வாக்களிக்கிறது என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பிய அமெரிக்காவைப் போல் இந்தியா எந்த நாட்டுக்குள்ளும் ராணுவ நடவடிக்கை எடுத்ததில்லை என்பதை அமெரிக்க கவனிக்க வேண்டும் என்றும் வரலாற்று ரீதியாக, பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்கவில்லை என்றும் கார் செட்டியின் கருத்துக்கு சர்வதேச வியூக வகுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேட்டோ உச்சி மாநாடு சமயத்தில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் அமைந்து விட்டதால், இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் இயலாமையை இது காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
















