விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 82 புள்ளி நான்கு எட்டு சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 2-ம் இடத்தில் உள்ளார்.