தமிழகத்திற்கு தண்ணிர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், பேசிய சித்தராமையா, காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், கர்நாடகத்தின் வலியுறுத்தலை மீறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவிரி விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 14-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் சித்தராமையை கூறினார்.