தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு கூறுவது சட்டத்தை மீறும் செயல் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விவசாய தேவை மற்றும் நீர் பற்றாக்குறை, போதிய மழையின்மை உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்,
இது குறித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் உத்தரவை மீறுவது அரசியல் சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு வழி தெரியும் என குறிப்பிட்டு பேசினார்.