தேனி மாவட்டம், பெரியகுளம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 87 ஆயிரத்து 500 ரூபாய் கைபற்றப்பட்டது.
தென்கரை பகுதியில் உள்ள இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதன்பேரில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர், அலுவலகத்தில் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில்வராத 87 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கைபற்றப்பட்டது. இதுதொடர்பாக இணை சார் பதிவாளர் பரமேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்