விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய சென்ற சர்வேயர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழிப்பனூர் கிராமத்தை சேர்ந்த தங்கபாண்டியன் – சுப்புலட்சுமி தம்பதியினர், தங்களது நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி அளித்த மனுவின் பேரில் 2 சர்வேயர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அந்த இடத்தின் அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளர் ராசையா மற்றும் ராஜபிரபு, அரிவாளுடன் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.