கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
அருமனை சந்திப்பு பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர், எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதினார்.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.