ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் மூலம் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.