தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற முதல்வரின் புகார் : மத்திய அரசு விளக்கம்!
Jun 4, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற முதல்வரின் புகார் : மத்திய அரசு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 13, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் மெட்ரோ போன்ற முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், தமிழ்நாட்டின் ரயில்வே, நெடுஞ்சாலை, விமான நிலையம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்கு 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய ஆட்சியில் 2024- 2025 பட்ஜெட்டில் 6 ஆயிரத்து 331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

அதேபோல கடந்த 2014ம் ஆண்டு தமிழக தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 4 ஆயிரத்து 985 கி.மீ. ஆக இருந்ததாகவும், இது தற்போது 6 ஆயிரத்து 806 கி.மீ ஆக அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமில்லாமல் சென்னை விமான நிலையம் சுமார் 2 ஆயிரத்து 467 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சம் வீடுகள் கட்டித்தர 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் விமான போக்குவரத்து தொடர்பான 5 திட்டங்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

Tags: central governmentChief Minister Stalin's allegationallocating fundsfunds to state
ShareTweetSendShare
Previous Post

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ; கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Next Post

கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies