தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்புக்கருதி இந்த 2 அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.