டெல்லியில் ‘துடிப்புமிகு கிராமங்கள் திட்டம்’ தொடர்பாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் துடிப்புமிகு கிராமங்கள் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், எல்லையோர மக்கள் வேலைவாய்ப்புக்காக இடம்பெயருவதை தவிர்க்கும் வகையில், அவர்கள் வாழ்விடங்களிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மேலும், எல்லையோரம் பணியமர்த்தப்பட்ட மத்திய ஆயுதப் படை போலீஸார், உள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களில் பொருட்கள் வாங்கி, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.