விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பைனான்சியர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கொடுத்த பணத்தை கேட்ட பைனான்சியர் மூக்கையாவை, முன்னாள் ஊராட்சி தலைவரான செல்வக்குமார், முருகன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு குறித்த விசாரணை விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.