தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியில் காட்டு யானை மிதித்து தோட்ட காவலாளி உயிரிழந்தார்.
சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கையா, அப்பகுதியில் உள்ள பிள்ளையார் பாண்டி என்பவரது தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூக்கையாவை காட்டு யானை மிதித்துக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மூக்கையாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.