காமராஜரின் ஆட்சியே தமிழகத்தின் பொற்காலம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் காமராஜர் எனவும், “தமிழகத்தின் கல்வித்தரம் உயர்வுக்கு காமராஜர் ஆட்சியே காரணம்” என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், “எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்து சாராண மக்களின் அன்பைப் பெற்று, அபார வெற்றி பெற்றவர்” எனவும், “தமிழகத்தின் வளர்சிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்தவர் காமராஜர்” என்றும் ஆளுநர் தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைவதற்கு காமராஜர் ஆட்சியே காரணம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.