இன்று நடைபெறும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐரோப்பிய கால்பந்து போட்டி கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
ஜெர்மனி தலைநகர் பெர்லின் ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை 72 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.