சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நடைபெற்ற அகழாய்வில் தந்தத்தினால் ஆன ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப்பணி நடைபெற்று வரும் நிலையில் மணிகள், சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பண்டையகால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தந்தத்தினால் ஆன ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 1.3 செண்டி மீட்டர் உயரமும், 1.5 செண்டி மீட்டர் விட்டமும் அளவுடைய இந்த ஆட்டக்காயை தொல்லியல் வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.