சென்னையிலிருந்து கரூர் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் அருவி போல் கொட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்தில், பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, கனமழை பெய்யவே, பேருந்துக்குள் மழை நீர் அருவிபோல் கொட்டியுள்ளது.
மேலும், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்துள்ளனர். இந்த காட்சிகளை அவர் செல்போனில் படம் பிடித்து, தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.