கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினத்தையொட்டி ஆழியார் கவியருவியில் வழக்கம்போல் சுற்றுலாபயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் வெளியேற்றப்பட்டனர். நீர்வரத்து சீராகும் வரை அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.