உலகிலேயே முதன் முறையாக 30 கோடி SUBSCRIBER-களைப் பெற்று சாதனை படைத்துள்ளார் ஜிம்மி டொனால்ட்சன் என்ற YOUTUBER. அவரது MR.BEAST CHANNEL பற்றி விரிவாக பார்க்கலாம்.
கோடிகளில் செலவு செய்து AUDIO LAUNCH வைப்பதைவிட YOUTUBE-ல் FIRST SINGLE, SECOND SINGLE, LYRIC VIDEO என்ற பெயரில் பாடல்களை வெளியிட்டு மில்லியன் கணக்கான VIEWS-களையும் பக்கா PUBLICITY-யையும் பெறுவதுதான் இன்றைய TREND. பைசா செலவில்லாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்காமல் லட்சக்கணக்கானோரிடம் ஒரு விஷயத்தை கொண்டு சேர்த்துவிடும் YOUTUBE-ன் REACH.
திறமையை வெளிப்படுத்தும் மேடையாகவும், சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும், வருவாய் மூலமாகவும் மாறியிருக்கிறது YOUTUBE. SMART PHONE இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் YOUTUBE CHANNEL தொடங்கிவிடலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான SUBSCRIBER-களையும், WATCH HOUR-யும் பெற்றுவிட்டால் அதன் பிறகு YOUTUBE மூலம் வருவாய் ஈட்ட முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
இப்படியான சூழலில் 30 கோடி SUBSCRIBER-களை தாண்டி சாதனை படைத்திருக்கிறது MR.BEAST என்ற YOUTUBE CHANNEL. அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்மி டொனால்ட்சன் என்ற இளைஞர்தான் இந்த CHANNEL-ன் உரிமையாளர். பல்வேறு சாகசங்களை செய்து மக்களை தம் பக்கம் ஈர்த்தவர் ஜிம்மி.
2012-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டாலும் 2018-ல்தான் உலகளவில் பிரபலமடைந்தது MR.BEAST CHANNEL. இதுவரை 807 வீடியோக்கள் மட்டுமே பதிவிடப்பட்டிருந்தாலும் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான VIEWS-களை தாண்டி போய்க்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக ஜிம்மி டொனால்ட்சன் பல்வேறு ஆபத்தான TASK-களை போட்டியாளர்களுக்கு வழங்கும் வீடியோக்கள் த்ரில் அனுபவத்தை கொடுப்பவையாக உள்ளன. ஜிம்மி கொடுக்கும் TASK-களை வெல்பவர்களுக்கு பெரும் பணம் கொடுக்கப்பட்டாலும் அதை வாங்குவதற்கு போட்டியாளர்கள் பெரும்பாடு படவேண்டும்.
உலகிலேயே அதிக SUBSCRIBER-களை கொண்ட YOUTUBE CHANNEL-ஆக T-SERIES இருந்தது. சுமார் 27 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ளது T-SERIES. கடந்த மாதம் அதை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த MR.BEAST தற்போது 302 மில்லியன் SUBSCRIBER-கள் என்ற மைல்கல்லை தொட்டிருக்கிறது. YOUTUBE CHANNEL-ஐ தாண்டி 2 கோடி மரக்கன்றுகளை நடுவது, தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார் ஜிம்மி டொனால்ட்சன்.