கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு வணிக பொருட்களின் ஏற்றுமதி விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்த ஏற்றுமதி 3 ஆயிரத்து 432 கோடி டாலராக இருந்தது, கடந்த ஜூன் மாதம் நாட்டின் வணிக பொருட்களின் ஏற்றுமதி 3 ஆயிரத்து 520 கோடி டாலராகஉயர்ந்துள்ளது.
இந்த ஏற்றுமதி உயர்வுக்கு மின்னணு பொருட்கள், ரசாயனங்கள், மருந்து பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பே காரணம் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.