இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஒன்றிணைந்து கால்களை பிடித்தப்படி நடனமாடிருந்தனர்.
இந்த நடனம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.