பீகாரில் விகாஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானியின் தந்தை கொலை வழக்கில், சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் தார்பங்கா நகரில் உள்ள தனது பூர்விக வீட்டில் இருந்த முகேஷ் சஹானியின் தந்தை ஜிதன் சஹானியை மர்ம நபர்கள் கொலை செய்தது அம்மாநில அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.