சென்னையின் ராயபுரம் பகுதியில் தங்க நகை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
இராயபுரத்தை சேர்ந்த கங்கா என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த முருகன், மற்றும் சாருலதா ஆகியோர் தங்களிடம் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டி கிடைக்கும் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய கங்கா 12 சவரன் நகைகளை கொடுத்துவிட்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். இதையடுத்து நகையை மீட்க முயன்ற போது இருவரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சாருலதாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.