தமிழகத்தில், உள்துறைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா, வருவாய்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தீரஜ் குமார் உள்துறை செயலாளராகவும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக குமார் ஜெயந்த்-ம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபாலும், பள்ளிக் கல்வித்துறை செயலாளராக மதுமதியும் தமிழக அரசு நியமித்துள்ளது.
மேலும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திர கலாவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல, ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.