பிரதமர் மோடியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஹரியானா மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகேந்திரகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஹரியானா அரசு முக்கியமாக மூன்று முடிவுகளை எடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.
அந்த வகையில், கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை 6 லட்ச ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, உள்ளாட்சி அமைப்புகளில் குரூப் ஏ பணியிடங்களுக்கு 8 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, குரூப் டி பணியிடங்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு என முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை ஹரியானா முதல்வர் நயப் சிங் சைனி எடுத்துள்ளதற்கு அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
இந்த மூன்று முடிவுகளும் பிரதமர் மோடியின் கொள்கைகளை பிரதிபலிப்பதாக அவர் மேற்கோள்காட்டினார்.