“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது” எனவும், தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சாதாரண மக்களை பெருமளவில் பாதிக்கும்” என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
திமுக அரசு திறனற்ற அரசாக செயல் படுகிறது எனக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சாதாரண மக்களை பாதிக்கும் எனத் தெரிவித்தார்.