யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராக வேண்டும் என அவரது வழக்கறிஞரிடம் திருப்பதி திருமலை போலீசார் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதி கோயிலில் சாதாரண தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை கேலி செய்யும் வீடியோவை யூடியூபர் டிடிஎப் வாசன் மற்றும் அவரது நண்பர்களும் சமூக ஊடங்களில் வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் திருமலை போலீசார் டிடிஎப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், டி டி எஃப் வாசனின் வழக்கறிஞர் திருமலை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்த போலீசார், விசாரணைக்கு டிடிஎப் வாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தனர்.