புனேயில் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின்பேரில், பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை பயிற்சியிலிருந்து திரும்ப பெறுவதாக முசெளரி தேசிய லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடெமி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தனது ஜாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழில் முறைகேடு செய்ததும், சொந்த வாகனத்தில் சைரன் பொருத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரை பயிற்சியிலிருந்து திரும்ப பெற முசெளரி தேசிய லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடெமி நடவடிக்கையை எடுத்துள்ளது.