கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மயிலை வேட்டையாடியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
பொன்னேகவுன்டன் புதூரில் உள்ள தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில மின்கம்பம் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது மின்கம்பம் மீது ஏறிய ஊழியர்கள் விவசாய தோட்டத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து மயிலை வேட்டையாடுவதை கண்டு அச்சமடைந்தனர்.
இதுகுறித்து ஊழியர்கள் புகாரளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்களை பொருத்தினர்.