கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கபட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆற்றில் இறங்கி துணி துவைக்கவோ, குளிக்கவே கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.