தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 2 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு கவிதா மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.