மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருபுரம ஆதினத்துக்கு சொந்தமான சட்டநாதர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிறப்பையொட்டி கோ பூஜை நடைபெற்றது.
முன்னதாக, விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, புங்கனூர் குட்டை என்னும் கன்றுக்கு கோ பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் பசு மற்றும் கன்று குட்டிகளுக்கு பழங்கள் மற்றும் அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இதேபோல், பிரம்மபுரீஸ்வரர் சாமி கோவிலில் உள்ள 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.