மகாராஷ்டிரா மாநிலத்தில், மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். மற்றொருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
மும்பை அடுத்துள்ள டோம்பிவலியில் குளோப் ஸ்டேட் கட்டிடத்தின் 3வது மாடியில். நாகினா தேவி மஞ்சிரம் என்ற பெண் தனது நண்பர்களுடன் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மஞ்சிரம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் நாகினா தேவி மஞ்சிரம் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.