மும்பை விமான நிலையத்தில் 600 காலி பணியிடங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.
விமான நிலையத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வேலைக்கு அதிகளவில் இளைஞர்கள் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
இதையடுத்து, அனைவரின் சுயவிவரங்கள் அடங்கிய குறிப்புகளை வாங்கிக் கொண்டு, தகுதியுள்ளவர்களை நேர்முக தேர்வுக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் குஜராத்தின் அங்கலேஷ்வரில் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பிக்க முண்டியடித்ததும் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.