பாரீஸ் ஒலிம்பிக் காத்திருக்கும் சாதனைகள்!
Jan 16, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் காத்திருக்கும் சாதனைகள்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் சாதனைகளை முறியடிக்கவும், புதிய சாதனைகளை உருவாக்கவும் பல நாடுகளின் வீரர், வீராங்கனைகள் காத்திருக்கின்றனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரை இன்னும் ஒரு சில தினங்களில் அலங்கரிக்கப் போகின்றன. நீண்ட நெடிய கனவுகளின் நிறைவேற்றத்திற்கான பெரும் வாய்ப்பாக பார்க்கப்படும் இந்த ஆண்டின் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், என்னவெல்லாம் நிகழப் போகிறது தெரியுமா?

ஒருமுறை எழுதிய வரலாற்றை திருத்தி எழுத காத்திருக்கும் சரித்திர நாயகர்களுக்கும், அதே சமயம் ஆயிரக்கணக்கான போட்டியாளர்களின் முதல் வாய்ப்பாகவும் இந்த பாரிஸ் ஒலிம்பிக் பார்க்கப்படுகிறது.

நடப்பு ஒலிம்பிக் தொடரில் ஏற்கனவே முறியடிக்கப்பட்ட சாதனைகளை புதுப்பிக்க காத்திருக்கும் அணிகளும், வீரர்களும் குறித்து தற்போது காண்போம்…

அமெரிக்க கூடைப்பந்து அணி இந்த ஆண்டு தங்கம் வென்றால், அந்த அணியின் மூத்த வீரரான கெவின் டியுரன்ட், ஒலிம்பிக் போட்டிகளில் தனது நான்காவது தங்கத்தை முத்தமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்குமேயானால், ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு அணியில் விளையாடி 4 தங்கங்களை ஒரு வீரர் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அதே போல தான் பிரான்ஸ் கைப்பந்து அணி தங்கம் வென்றால், அந்த அணியின் நிகோலா கார்பாடிக் தனது 40வது வயதில் 4வது தங்கத்தை முதமிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2008, 2012 மற்றும் 2022 ஆகிய ஒலிம்பிக் தொடர்களில் பிரான்ஸ் அணியை வெற்றிபெற செய்த நிகோலா கார்பாடிக், பாரிஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது!

ஒலிம்பிக் போட்டிகளில் 7 முறை தங்கப் பதக்கங்கள் வென்றுள்ள அமெரிக்காவின் கேட்டி லெடேக்கி மற்றும் ஜெர்மனியின் குதிரை ஏற்று வீராங்கனை இசெபெல் வெர்த் ஆகியோர், அனைத்து விதமான விளையாட்டுகளிலும் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகள் என்ற பெருமையை பெறுவர்.

வாழ்நாளில் 10 ஒலிம்பிக் தொடர்களில் ஒரு நபர் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான். இருப்பினும் ஜார்ஜியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நினோ சலுக்வட்சே தனது 55 வது வயதில் 10 வது ஒலிம்பிக்கில் பங்கேற்று, முறியடிக்க முடியாத சாதனையை திருத்தி எழுத இருக்கிறார். 1988ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற சியோல் ஒலிம்பிக் தொடரே இவரது அறிமுக தொடராகும்…

உஸ்பெகிஸ்தான் நாடு கால்பந்து விளையாட்டின் மூலமாகவும், அஜர்பைஜான் நாடு மூவர் கூடைப்பந்து போட்டியாலும் தங்களது முதல் ஒலிம்பிக் தொடரில் கால்தடம் பதிக்கின்றன. அடுத்ததாக அமெரிக்காவின் மூவர் மற்றும் ஐவர் மகளிர் கூடைப்பந்து அணி இந்த முறை தங்கப் பதக்கம் வென்றால், தொடர்ந்து 8 முறை தங்கம் வென்ற ஒரே அணி என்ற பெருமையை தக்கவைத்துக்கொள்ளும். அமெரிக்க மகளிர் கூடைப்பந்து அணியின் முதல் தங்கம் 1996 ஆம் ஆண்டு அட்லான்டாவில் கிடைக்கப்பெற்றது.

இதற்கு முன்பாக தொடர்ந்து 7 முறை தங்கம் வென்ற அணி என்ற பெருமையை அமெரிக்காவின் ஆடவர் கூடைப்பந்து அணி தக்கவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1936ம் ஆண்டு முதல் 1968-க்கு இடைப்பட்ட காலத்தில் தொடந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது அமெரிக்கா.

அதே போல அமெரிக்கா மகளிர் கூடைப்பந்து அணியின் டயானா தௌரசி ஏற்கனவே குழு விளையாட்டு போட்டிகளில் அதிக தங்கம் வென்றவர் என்ற சாதனையை தக்கவைதுள்ளார். இந்த முறை அமெரிக்கா மகளிர் கூடைப்பந்து அணி தங்கம் வென்றால் குழு விளையாட்டில், தொடர்ந்து 8 முறை தங்கம் வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெரும்….

ஆகமொத்தம் இந்த ஒலிம்பிக் தொடர் பல்வேறு சுவாரசங்களை கொடுப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Tags: Achievements waiting for the Paris Olympics!
ShareTweetSendShare
Previous Post

வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!

Next Post

டெல்லியிலும் நம்ம யாத்ரி ஆப் ஓலா, உபருக்கு கடும் போட்டி!

Related News

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் – எல்.முருகன்

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies