டெல்லியிலும் நம்ம யாத்ரி ஆப் ஓலா, உபருக்கு கடும் போட்டி!
Sep 25, 2026, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியிலும் நம்ம யாத்ரி ஆப் ஓலா, உபருக்கு கடும் போட்டி!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து டெல்லிக்கும் நம்ம யாத்ரி செயலி விரிவுப்படுத்தப்படுவதால் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக மாறியுள்ளது.

வாடகைக்கு கார், ஆட்டோ சேவைகளை வழங்குவதில் ஓலா, உபர் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இதில் கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போர் இணைந்து சவாரிகளை பெற்றுக்கொள்ளலாம். அதற்காக பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். இதனால் தங்களுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை என்ற புகார் ஓட்டுநர்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டது.

இந்நிலையில் பயணிகள் கொடுக்கும் மொத்த பணத்தையும் ஓட்டுநர்களே எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியுடன் கொண்டு வரப்பட்டது நம்ம யாத்ரி ஆப். மத்திய அரசின் ONDC-க்கு கீழ் செயல்படுவதால் நம்ம யாத்ரி ஆப் ஜீரோ கமிஷன் என்ற அடிப்படையில் இயங்குகிறது. ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் கொடுப்பதற்கு பதிலாக ஓட்டுநர்கள் சந்தா செலுத்தினால் போதும். நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு ட்ரிப்புகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஒரு ட்ரிப்புக்கு மூன்றரை ரூபாய் செலுத்த வேண்டும். அதுவும் முதல் 10 ட்ரிப்புகளுக்குத்தான். அதற்குப்பின் கட்டணம் கிடையாது.

2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் நம்ம யாத்ரி ஆப் நடைமுறைக்கு வந்தது. இது ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் குறைந்த கட்டணம். ஒரு மணி நேரத்துக்குள் 10 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணிக்க 190 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே நேரம் மற்றும் தொலைவுக்கு காரை பயன்படுத்தினால் வண்டிக்கு ஏற்ப 250 முதல் 390 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

10 கிலோ மீட்டரையும் ஒரு மணி நேரத்தையும் தாண்டிவிட்டால் ஒரு கிலோ மீட்டருக்கு 10 முதல் 21 ரூபாயும், ஒரு நிமிடத்துக்கு 3 ரூபாயும் செலுத்த நேரிடும். இரவு நேரம் என்றால் 250 ரூபாய் நிலையான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிக்அப் சார்ஜ், சுங்கக்கட்டணம் போன்றவை தனி.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள நம்ம யாத்ரி ஆப்பை டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக நம்ம யாத்ரி மாறியுள்ளது.

Tags: Namma Yatri of Ola and Uber in Delhi too!
Share
Tweet
SendShare
Previous Post

பாரீஸ் ஒலிம்பிக் காத்திருக்கும் சாதனைகள்!

Next Post

இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு வன்முறை களமான கல்வி நிலையங்கள்!

Related News

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – ஷெபாஷ் ஷெரீப்பிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

மழை பொய்த்துவிட்டதால் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது – டி.கே.சிவக்குமார்

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்!

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க கிரீடம் மாயமாகவில்லை – தேவசம் போர்டு விளக்கம்!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies