சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர் காணிக்கையாக வழங்கிய தங்கக் கிரீடம் மாயமாகவில்லை என தேவசம் போர்டு விளக்கமளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 55.72 சவரன் எடையுள்ள தங்கக் கிரீடம் காணவில்லை என்ற தகவல் தவறானது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கிரீடம் சபரிமலை சன்னிதானத்தில் இல்லாத நிலையில்,
ஆறன்முளாவில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக இருப்பதாக திருவாபரணம் ஆணையர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அசல் தங்கக் கிரீடத்துடன் அதே மாதிரியில் உருவாக்கப்பட்ட மற்றொரு கிரீடமும் இருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்காக மாதிரி பொருட்கள் வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஸ்ட்ராங் ரூமில் உள்ள வேறு சில பொருட்களின் கணக்குகள் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாகவும், அவை குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
















