ஜெம் வீரமணி பாலியல் வழக்கு - ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!
Sep 24, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 24, 2026, 02:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீது எழுந்த குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், கடந்த 2019-ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 6 ஆண்டுகள் தாமதமாக கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த தாமதத்துக்கு காவல்துறையிடம் எந்த விளக்கமும் இல்லாததால், வழக்கில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாங்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் யாரும் இதுவரை காவல்துறையால் அடையாளம் காணப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா முன்பாக ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் 29-ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags: r veeramani case updateveeramani case historyshanthi veeramani caseveeramani pocso casepocso case veeramaniveramani caser veeramani pocso caseveeramani casegem veeramani case updategem veeramani caseveeramani case updateveeramani case latest
Share
Tweet
SendShare
Previous Post

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க கிரீடம் மாயமாகவில்லை – தேவசம் போர்டு விளக்கம்!

Related News

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க கிரீடம் மாயமாகவில்லை – தேவசம் போர்டு விளக்கம்!

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies