ஜெம் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், கைபேசிகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவரது கூட்டாளிகள் சாந்தி, மகேந்திர சிம்மன் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பெரம்பூரில் பிரகாஷ் என்பவரது வீடு, ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகம், கோபாலபுரத்தில் வீரமணியின் அலுவலகங்கள் மற்றும் தி.நகரில் உள்ள வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பாலியல் வழக்கை கைவிடுவதற்காக பல கோடி ரூபாய் செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
















